முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
சங்ககிரியில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி திருச்செங்கோடு பிரிவு சாலை பகுதியில் சங்ககிரி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினம் தலைமையில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதிருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது சங்ககிரிபேரூர் செயலாளர் செல்வம் மாவட்ட கட்டுமான தொழிற்சங்க துணை செயலாளர் பொன்னையன், மாணவரணி ஒன்றிய செயலாளர் சரவணன், விவசாய அணி ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர் மருதாசலம், ஜெபேரவை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி, முன்னாள் நகர செயலாளர் செல்லப்பன்,இலக்கிய அணி ஒன்றிய தலைவர் மோகன், அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.