முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

செய்யாறில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;

Update: 2023-12-05 09:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செய்யாறு தொகுதியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் ஆலோசனையின் பெயரில் செய்யாறு நகர கழக அதிமுக சார்பில் ஆரணி கூட்ரோட்டில் எம்ஜிஆர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமை தாங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Advertisement

அதேபோல் செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக அலுவலகத்திடம் ஒன்றிய செயலாளர் செயலாளர் எம்.மகேந்திரன் தலைமை தாங்கி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், நகர அவை தலைவர் ஏ.ஜனார்த்தனன், மாவட்ட நிர்வாகிகள் ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், ஜி.கோபால், ஜி.கோவிந்தராஜ், வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் எம்‌.அரங்கநாதன், சி.துரை, வே.குணசலன், வழக்கறிஞர் ஆர்.கே.மெய்யப்பன், முனுசாமி, பொன் அருளானந்தம், செபாஸ்டின் துரை, தசரதன், எச்.சுரேஷ்குமார், தணிகாசலம், சுதாகர், பிரகாஷ், எழில், இளையராஜா, ரமணமுருகன் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News