முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் - அதிமுகவினர் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2024-02-25 09:30 GMT

 திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர்.ஜெ.ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர்.ஜெ. ஜெயலலிதா  திருவுருவப் படத்திற்கு முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் எம்.எல்.ஏ., அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி தீபாராதனை காண்பித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சு. குணசேகரன், என்.எஸ்.என். நடராஜன், பழனிச்சாமி உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியவர், கடந்த 2011 ஆம் ஆண்டு தொழிலில் திருப்பூர் நழிவடைந்த பொழுது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அம்மாவிடம் எடுத்துக் கூறி வட்டி இல்லா கடனாக 200 கோடி ரூபாய் வழங்கி பின்னலாடை நிறுவனங்களுக்கு மீண்டும் புத்துயிர் தந்தார், அதைத்தொடர்ந்து 10 ஆண்டு காலம் திருப்பூர் தொழிலில் மிகச் சிறப்பாக செயல்பட்டது, பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாக இருந்தனர், ஆனால் தற்பொழுது திமுக ஆட்சி காலத்தில் தொழில் மிகவும் நலிவடைந்து விட்டது பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது , அத்தியாவசிய பொருட்கள் இல்லை உயர்வால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்,

அதேபோன்று வீட்டு வாடகை உயர்வு, தண்ணீர் வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்சார கட்டன உயர்வு போன்ற காரணங்களால் ஏழை எளிய மக்கள் வசிக்க முடியாத பகுதியாக திருப்பூர் மாறிவிட்டது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வர நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெறும், திருப்பூரில் 2½ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி அடையும், பிற கட்சிகளைப் போல பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து அதிமுக செயல்படவில்லை, தொண்டர்களின் உழைப்பில் வருகிற வருவாய் வைத்துக்கொண்டு கட்சி செயல்பட்டு வருகிறது, பாஜக பொதுக்கூட்டம் எப்படிப்பட்ட மாநாடு என்று போகப் போக தான் தெரியும் என்று முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேட்டியளித்தார்.

Tags:    

Similar News