முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

வீரகனூரில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.;

Update: 2024-02-25 10:22 GMT
உணவு  வழங்கல் 

 மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு,2000 பொதுமக்களுக்கு, வெஜிடபிள் பிரியாணி, கேசரி, தண்ணீர் பாட்டிலுடன் உணவுகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவிற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை துனைத்தலைவர் கணேஷ் ரூ66,000-/ செலவு செய்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். முன்னதாக,வீரகனூர் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், வீரகனூர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள மறைந்த புரட்சித்தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர், மற்றும் செல்வி ஜெ. ஜெயலலிதா  திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்வில், தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், வீரகனூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் கவரப்பனை வெங்கடேசன், சேலம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவக்குமார்,வீரகனூர் நகரச் செயலாளர் ராஜேந்திரன்,வீரகனூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும் முன்னாள் நகரச் செயலாளருமான முத்துலிங்கம், அமைப்புச் செயலாளர்கள் கணபதி ராஜா,ஜெயராமன், பரஞ்சோதி, கலியபெருமாள்,செல்வராஜ், செல்வம்,செந்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் சூரிய பிரகாஷ், முத்துராஜா, மற்றும் ஏனைய நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News