முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சாமி தரிசனம்

திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோயிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-03-29 11:46 GMT

ஓபிஎஸ் சாமி தரிசனம்

திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோயிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம் செய்தார். திண்டுக்கல் ராமலிங்கம்பட்டியில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவில் சிறப்பு பெற்றதாகும். இந்தக் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்களுக்கு வேண்டும் வரம் கிடைப்பதால் ஆர்வமுடன் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரும் இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Tags:    

Similar News