சிவகாசியில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா

சிவகாசி அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார்.

Update: 2024-02-27 03:25 GMT

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி  மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.மேலும் இந்நிகழ்வின்போது விருதுநகர் மேற்கு மாவட்ட கழக துணைச்செயலாளர் K.C.சுப்பிரமணி, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் V.S.பலராம்,சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெகத்சிங்பிரபு, சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் R.கரைமுருகன் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை லயன் V.கருப்பு (எ) லட்சுமிநாராயணன், சிவகாசி மேற்கு ஒன்றிய கழக செயலாளர், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News