முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் பூர்வீக வீடு நூலகமாக மாற்றம்

கன்னியாகுமரியிலுள்ள முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் பூர்வீக வீடு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.;

Update: 2023-12-27 10:19 GMT

கன்னியாகுமரியிலுள்ள முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் பூர்வீக வீடு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு குமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்தவர். இவர் அவரது பூர்வீக வீட்டை நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றி ரெத்தினம்மாள் செல்லப்பன் என்று தனது தாய் தந்தையின் பெயர் சூட்டி, இன்று தாயார் ரெத்தினம்மாள் ரிபன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை , தீயணைப்புதுறை உட்பட பல துறைகளில் இருந்து கலந்து கொண்டவர்கள் புத்தகங்களை பரிசுகளாக வழங்கினர்.

Advertisement

இங்கு டிஎன்பிசி, சிவில் சர்வீஸ் , நீட், வங்கி தேர்வு மத்திய மாநில அரசு சார்ந்த தேர்வுகள் சேர்ந்த பல பயிற்சிகளும் சிறப்பு வல்லுனர்களை கொண்டு அளிக்கப்பட்ட உள்ளன. இது சம்பந்தமான புத்தகங்களும் பள்ளி கல்லூரி சேர்ந்த புத்தகங்களும் தினசரி செய்திதாள்களும் இந்த நூலகத்தில் உள்ளன. காலை ஆறுமணி முதல் இரவு எட்டு மணி வரை நவீன வசதிகளுடன் இந்த நூலகம் செயல்பட உள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, :- மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகபடுத்தினால் வேலைவாய்பிற்கு பயன்னுள்ளதாகும். இந்த பகுதி இளைஞர்கள் ஐஏஎஸ் , ஐபிஎஸ் படிக்க வழிகாட்டியாக, இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி இங்கு பயிலும் மாணவன் நோபல் பரிசு பெற வேண்டும் என்பது என் ஆவல் மேலும் படைப்பாற்றல், சிந்தனை திறனை அதிகப்படுத்த வேண்டும் என பேட்டியின் போது தெரிவித்தார்.

Tags:    

Similar News