அதிமுக நிர்வாகியை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்

விருதுநகரில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிர்வாகியை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி அளித்த முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி.

Update: 2023-11-18 08:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் நகரக் கழகத்திற்குட்பட்ட ஆறாவது வார்டு கிளைச் செயலாளரும் முன்னாள் நகராட்சி துணை சேர்மன் மாரியப்பன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கே டி ராஜேந்திர பாலாஜி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாரியப்பனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் பின்னர் முதற்கட்டமாக மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவியும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் விஜயகுமரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News