இலவச கண் சிகிச்சை முகாம் நடத்திய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

CVB அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2024-05-12 16:11 GMT

கண் சிகிச்சை முகாம் 

விராலிமலை மே 12 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் 70 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு,

தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் அன்னதானங்கள் நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதி சார்பில் விராலிமலை , இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் சிறப்பு நீர் மோர் பந்தல்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கழக பொதுச்செயலாளர் அவர்களது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடாக டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களின் CVB அறக்கட்டளை மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமினை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்படைந்தவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள்  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜ், திருமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, மாவட்ட வர்த்தக சங்க பொருளாளர் வெல்கம் மோகன், மாவட்ட வர்த்தக இணை செயலாளர் ஜனனி ராமச்சந்திரன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல செயலாளர் மணிகண்டன், கூட்டுறவு வங்கி தலைவர் அய்யப்பன், விராலிமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் தீபன் சக்ரவர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஐயப்பன்,

ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், ஒன்றிய பாசறை செயலாளர் சுதாகர், விராலிமலை நகர செயலாளர் செந்தில், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவேல், பாசறை ராஜா, வழக்கறிஞர்கள் சேகர், வீரமணி, மகளிரணி செல்வி, அண்ணா தொழிற்சங்க சரவணன், ஐடி விங்க் அஜித், அப்பு, கோபி, கருணா, ஜனா, சரத்பாபு, விஷ்ணு உள்ளிட்ட நூற்றுக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News