எஸ்டிபிஐ வேட்பாளர் முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் பிரசாரம்
கொடைக்கானலில் அதிமுக கூட்டணியின் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் போட்டியிடுகிறார், இதனையடுத்து கொடைக்கானல் நகர்ப்பகுதிகளிலும்,கிராம பகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்,இந்த பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்,முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றனர்,
குறிப்பாக மூஞ்சிக்கல் பகுதியில் திறந்த வாகனத்தில் பிராச்சரம் மேற்கொண்ட போது, திண்டுக்கல் சீனிவாசன் பேசிய போது திமுக செய்துள்ள திட்டங்களை எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்காமல் அதன் மாறாக சிலிண்டர் விலை,பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும் என கூறி திமுக மக்கள் காதில் பூ சுற்றுகிரார்கள் என்றும் அதே போல மாநில அரசு சிலிண்டர் விலை,டீசல்,பெட்ரோல் விலை குறைக்கப்படும் என கூறி ஒரு பைசா கூட குறைக்காமல் மத்திய மாநில அரசு இரண்டு கட்சியும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்தார்,
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசிய போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் முபாரக் அவர்களுக்கு வாக்கு செலுத்துங்கள், திமுக 3 ஆண்டுகளாக கொடைக்கானலுக்கு எந்த நலத்திட்டமும் செய்யவில்லை,அதிமுக செய்த நலதிட்டங்களே, குண்டாறு திட்டம் நிறைவேற்றியது, சாலை வசதி, மற்றும் மின்சாரம் தடையில்லாமல் வழங்கியதும் அதிமுக அரசு தான் சுற்றுலாதலத்தை மேம்படுத்தியதும் அதிமுக தான், பேருந்து நிலையம் அமைத்ததும், அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தியதும், ஏரியை சுத்தப்படுத்தி ஆழப்படுத்தியதும் அதிமுக தான் என்றும் எதையும் செய்யாமல் உள்ளது திமுக,520 வாக்குறுதி கொடுத்து ஒன்றும் செய்யவில்லை தாலிக்கு தங்கம்,லேப்டாப் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முடக்கியது வேதனை தான் கொடுத்துள்ளது,வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும், தகுதியறிந்து பாத்திரம் அறிந்து பிச்சை போடுவது போல தகுதியான முபாரக்கிற்கு வாக்களியுங்கள், ஆற்றலும் திறமையும் உடையவர் முபாரக், முன்மாதிரி தொகுதியாக மாற்ற கூடியவர் முபாரக் என தெரிவித்தார்,
வேட்பாளர் முகம்மது முபாரக் பேசியதாவது, உங்களில் ஒருவன் நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் எனக்கு வாக்களியுங்கள்,மனசாட்சிபடி உழைக்கும் எனக்கு உங்களின் குரலாக ஒலிக்க உள்ள எனக்கு வாக்களியுங்கள், திண்டுக்கல் தொகுதியை இந்தியாவே திரும்பி பார்க்கும் தொகுதியாக முன்மாதிரி தொகுதியாகவும் மாற்றுவேன்,என்னை வெற்றி பெற செய்தால் அதிமுக சாதனை பட்டியல் போல் பல திட்டங்கள் முன்வைத்துள்ளேன், உலக சுற்றுலாதளமான கோடையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கொடைக்கானல் வில்பட்டி சாலை முதல் பெருமாள்மலை வரை சாலை விரிவாக்கப்படும், மல்டி லெவல் கார்ப்பார்க்கிங் அமைக்கப்படும், மூணாறு சாலை விரைவில் திறக்கப்படும் அதனால் பொருளாதாரம் உயரும், மலைப்பகுதியில் விளையும் பொருட்களை விற்பனை செய்யவும் போர்க்கால அடிப்படையில் பல பணிகளை துவங்குவேன் மூன்றாம் இடத்திலுள்ள எனக்கு வாக்களியுங்கள்,இரட்டை இலையில் முத்திரையிட்டு மக்கள் பணியாற்ற வாய்ப்பளியுங்கள் என நிறைவு செய்தார்,
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முபாரக் எனக்கு வாக்கு அளித்தால் இந்தியா திரும்பி பார்க்கும் அளவிற்கு முன் மாதிரியான தொகுதியாக திண்டுக்கலை மாற்றுவேன்,ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைப்பேன், மேலும் பல்வேறு பணிகள் செய்ய தயாராக உள்ளேன் நான் பணி செய்வதற்கு நீங்கள் வாக்கு அளியுங்கள் என பேட்டியளித்தார்.