அரசு பள்ளியை சீரமைத்து கொடுத்த முன்னாள் மாணவர்கள்

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மறு சீரமைத்து, அழகிய வர்ணம் பூச்சு பணிகளை செய்து கொடுத்த முன்னாள் மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

Update: 2024-02-12 03:16 GMT

பாராட்டு விழா 

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1996- 98ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை மறு சீரமைத்து, அழகிய வர்ணம் பூச்சு பணிகளை செய்து கொடுத்தனர். இதற்கான விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அத்துடன், பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவும் இணைந்து நடத்தப்பட்டது. முன்னதாக, 1996-98 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் 25 வருடங்களுக்கு முன்னர்,வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுத்த உபயோதாரர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களை பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தி, தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் நடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி, ஐம்பதாவது கோட்ட மாமன்ற உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவின்முடிவில்,பள்ளியில் பயிலும் சுமார் 500 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக நடைபெற்ற இந் நிகழ்ச்சி, காண்போர் அனைவரையும் மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியது.
Tags:    

Similar News