குமரியில் முன்னாள் மத்திய அமைச்சர் சாலை மறியல்
குலசேகரத்தில் கனிமவளம் ஏற்றி வந்த லாரி மோதி பெண் உயிரிழந்ததை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக கடந்த பல ஆண்டுகளாக புகார் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாலும் தொடர்ந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை கண்டித்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் சார்பில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் குலசேகரம் பகுதி சேர்ந்த அமல்ராஜ் என்பவரும் அவரது மனைவி அனிதா (40) என்பவருமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் பின்னால் வந்த கனிமவள லாரி இவர்கள் அதிவேகமாக வந்து இவர்கள் மீது மோதியது. இதில் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி அனிதா சம்பவ இடத்திலேயே தலை சிதைந்து பலியானார். கணவர் அமல்ராஜ். படுகாயம் அடைந்தார். அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அறிந்ததும் அப்பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டு, அனைத்து கட்சியினர் உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர. இந்தப் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் ரெண்டு மணி அளவில் தொடங்கி போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் குமரி வழியாக இயக்கப்படுகின்ற அனைத்து கனிம வள லாரிகளையும் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவியது.