தர்மபுரியில் 4ம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி தகவல் தர்மபுரியில் 4ம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-09 15:22 GMT

நீச்சல் பயிற்சி 

தர்மபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் 4ம் • கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நாளை (10ம்தேதி) தொடங்குகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில், நீச்சல் பழகுதல் திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. அதன்படி 4ம் கட்ட நீச்சல் பழகுதல் பயிற்சி முகாம் நாளை (10ம் தேதி) தொடங்கி, 21ம் தேதி வரை,தர்மபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் நடக்கிறது. பெண்களுக்கு தனியாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.தினசரி காலை 7 முதல் 8 மணி வரையும்,காலை 8 முதல் 9 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல் மாலை 4.30 முதல் 5.30 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கும், காலை 9 முதல் 10 மணி வரை மாணவி கள் மற்றும் பெண்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெ றும். நீச்சல் பயிற்சி கட்டணம் 1,770 ஆகும். இதற்கான விண்ணப்பம் நீச்சல் குளம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News