ரூ.1.86 கோடி செலவில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்ட அடிக்கல்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் ரூ.1.86 கோடி செலவில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-01-28 11:18 GMT

அடிக்கல் நாட்டு விழா

 செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சி பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருவிளையாட்டம், மேமாத்தூர், கீழையூர், நல்லாடை, செம்பனார்கோவில், ஆறுபாதி, வடகரை உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் நிலம் பத்திர பதிவு, திருமண பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நூறு ஆண்டுகள் பழைமையான இந்த கட்டடம் பழுதடைந்து நிலையில் இடிந்து விழும் நிலையில் இருந்த வந்தன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிர்வாகம் மற்றும் நிதித்துறையின் கீழ் ரூ.1.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு வைத்து பணியை தொடங்கி வைத்து பேசினார். இதில் செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், கூட்டுறவு சங்க தலைவர் ஞானவேலன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News