ஊத்துப்பட்டியில் சேவல் சண்டை: நான்கு பேர் கைது
அரவக்குறிச்சி அருகே ஊத்துப்பட்டியில், சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்துப்பட்டியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய நான்கு பேர் கைது. கரூர் மாவட்டம் முழுவதும் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி எவரேனும் சேவல் சண்டை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை மீறி,கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட ஊத்துப்பட்டியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்துவதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜனவரி 17ஆம் தேதி மாலை 4 மணி அளவில் ஊத்துப்பட்டியில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள முன் தோட்ட பகுதியில் சேவல் சண்டை நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சேவல் சண்டையில் ஈடுபட்ட, அரவக்குறிச்சி, ஊத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, கூம்பூர்புதூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், கந்தசாமி, பழனிசாமி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும், சேவல் சண்டைக்கு பயன்படுத்திய இரண்டு சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.
நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையபினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.