தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது
தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மே 4-ம் தேதி மதியம் 12.30 மணி அளவில், தென்னிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அருகில் உள்ள முரளை காலனி பகுதியில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்தில் சூதாடிய புகலூர் தாலுகா, துக்காச்சி, முரளை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, பழனிசாமி, ராமசாமி, முருகேசன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.200 ஐ பறிமுதல் செய்தனர்.
பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த தென்னிலை காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.