வடுவூர் அருகே கதண்டு கடித்து நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி
வடுவர் அருகே கதண்டு கடித்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
Update: 2023-12-14 10:01 GMT
வடுவர் அருகே கதண்டு கடித்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடுவூர் அருகே எடகீழழயூர் கிராமத்தில் செல்போன் கோபுரத்தில் கதண்டு விஷப் பூச்சி கூடு கட்டி இருந்தது. கதண்டுகள் திடீரென பறந்து வந்து அந்த வழியாக சாலையில் சென்றவர்களை கடித்தது. இதில் எடகீழையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா வயது 43 ,ராஜாங்கம் வயது 67 , பாலன் வயது 65, வேண்டாமாள் வயது 65 ஆகிய நான்கு நபர்களையும் கதண்டுகள் கடித்தது. அவர்களை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.