திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பெண் மீது புகார்

திருப்பூர் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Update: 2024-02-03 12:34 GMT

மனு அளித்த மக்கள்

 திருப்பூர் ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதியில் வசித்து வந்த சாரதா என்பவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான ஏல சீட்டுகளை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் சாரதா என்பவர் நடத்தி வந்த ஏலச்சீட்டில் உறுப்பினராக சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர் இந்நிலையில் சீட்டுகள் முடிவடைந்த நிலையில் சாரதா சீட்டு செலுத்தியவர்களுக்கு தொகையை திருப்பித் தராமல் இழுத்தடிப்பு செய்து வந்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பணம் செலுத்தியவர்கள் சாரதா என்பவரிடம் தங்களது தொகையினை திரும்ப கேட்டபோது சாரதா காலதாமதத்தை கூறி சீட்டு செலுத்தியவர்களை ஏமாற்றி வந்துள்ளார் இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பெண்கள் தாங்கள் இழந்த தொகையினை சீட்டு மோசடி செய்து ஏமாற்றிய சாரதா என்பவரிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கு வரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News