வாடகை கார் தொழில் செய்வதாக கூறி பூசாரியிடம் ரூ.12 லட்சம் மோசடி!

காரமடை அருகே வாடகை கார் தொழில் செய்வதாக கூறி பூசாரியிடம் ரூ.12 லட்சம் மோசடி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-10 13:02 GMT

  காரமடை அருகே வாடகை கார் தொழில் செய்வதாக கூறி பூசாரியிடம் ரூ.12 லட்சம் மோசடி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

மேட்டுப்பாளையம்: காரமடை பெல்லத்தி பகுதியைச் சேர்ந்த முருகேசன் அங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் பூசாரியாக பணி செய்து வருகிறார். இந்த கோவிலுக்கு வீரபாண்டி பிரிவை சேர்ந்த சங்கர்(எ) சிவா அடிக்கடி வந்து செல்லும் நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் முருகேசனிடம் தான் வாடகை கார் தொழில் செய்து வருவதாகவும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மாதம் 45 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என கூறியதை நம்பிய பூசாரி முருகேசன் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.பணத்தைப் பெற்றுக் கொண்ட சங்கர் கூறியபடி பணத்தை தராமல் இழுத்தடித்ததால் தான் ஏமாற்றபட்டதை அறிந்த முருகேசன் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.விசாரணையில் சங்கர் பெல்லத்தி பகுதியில் பல்வேறு நபர்களிடம் இதுபோன்று பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News