பொறியாளரிடம் ரூ.1.37 லட்சம் மோசடி- மர்ம நபருக்கு வலை

தூத்துக்குடியில் தனியாா் அனல் மின் நிலைய பொறியாளரிடம் ரூ.1.37 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Update: 2023-12-31 04:19 GMT

மோசடி 

தூத்துக்குடி ரோச் காலனி பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா்(36). தூத்துக்குடியில் உள்ள தனியாா் அனல்மின் நிலையத்தில் எலக்டரிக்கல் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக வருமானம் வரும் என ஒரு குறுஞ்செய்தியைப் பாா்த்த விஜயகுமாா், அதில் உள்ள எண்ணில் தொடா்பு கொண்டு பேசினாராம். 

அந்த எண்ணில் பேசிய நபா், இதில் பணம் முதலீடு செய்தால் மாதந்தோறும் அதிக வருவாய் ஈட்டலாம் என ஆசை வாா்த்தை கூறினாராம். இதை நம்பிய விஜயகுமாா், ரூ.1 லட்சத்து 37,650ஐ கடந்த மே மாதம் 4 தவணைகளாக ஜி-பே மூலம் அனுப்பினாராம். ஆனால், அவா் கூறியதுபோல, பணம் எதுவும் இவருக்கு வரவில்லை. அந்த எண்ணையும் தொடா்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதையறிந்த அவா், இது குறித்து சைபா் கிரைம் போலீஸாருக்கு ஆன்லைன் மூலம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா். மேலும், விஜயகுமாா் ஜி-பே மூலம் எந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினாரோ அந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், விஜயகுமாா் இழந்த பணம் திரும்ப கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சைபா் கிரைம் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News