கடன் தருவதாக கூறி ஓட்டுநரிடம் மோசடி !
இணையவழியில் கடன் தருவதாகக் கூறி ஓட்டுநரிடம் ரூ. 2.27 லட்சம் மோசடி நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-08 09:12 GMT
இணையவழி
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் இணையவழியில் கடன் தருவதாகக் கூறி பேருந்து ஓட்டுநரிடம் ரூ. 2.27 லட்சம் மோசடி செய்த மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். பாபநாசம் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநருக்கு 2022 ஆம் ஆண்டில் வந்த கைப்பேசி அழைப்பில் குறைந்த வட்டியில் ரூ. 7 லட்சத்துக்கு தனி நபர் கடன் வழங்குவதாகத் தகவல் வந்தது. இதற்கான கட்டணம் செலுத்தினால் கடன் தொகை வழங்கப்படும் எனவும் எதிர்முனையில் பேசிய மர்ம நபர் கூறினார். அதற்கு பதிவுக் கட்டணம், வரி, கே.ஒய்.சி. கட்டணம் என பல்வேறு கட்டணங்களைச் செலுத்துமாறு ஓட்டுநரிடம் மர்ம நபர் கூறினார். இதை நம்பிய ஓட்டுநர் பல்வேறு கட்டங்களாக ரூ. 2.27 லட்சம் மர்ம நபரின் வங்கிக் கணக்குக்கு செலுத்தினார். அதன் பிறகு மர்ம நபர்கள் கடன் தொகையை வழங்காததுடன், ஓட்டுநரின் அழைப்பையும் எடுத்து பேசவில்லை. இது குறித்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் இணையதளக் குற்றக் காவல் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.