அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி வழங்கினார்.;
Update: 2023-12-16 11:23 GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி வழங்கினார்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வருகிறது. மொடக்குறிச்சி தொகுதி, எழுமாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் குலவிளக்கு ஊராட்சி, மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி , பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளி என அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி வழங்கினார். அரசு பள்ளி மாணவ மாணவிகள் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி படிப்பில் முன்னேற வேண்டும் என்றார்.