அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
செஞ்சி அருகே சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 12:07 GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் டிலைட் ஆரோக்கியராஜ், ஊராட்சி மன்ற தலைவர் அபர்ணா ரவி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு 244 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினர். இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபாலன், ஒன் றிய செயலாளர் பச்சையப்பன், ஒன்றிய தலைவர் வாசு, ஊராட்சி துணை தலைவர் சித்ரா, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சிற்ற ரசு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரேவதி, பட்டதாரி ஆசிரி யர் திலீப் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் அருள்தாஸ் நன்றி கூறினார்.