மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

உத்திரமேரூரில் 489 பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை எம்பி செல்வம் ,சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் வழங்கினர்.

Update: 2024-01-02 08:25 GMT

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்கள் எவ்வித சிரமமின்றி கல்வி கற்கும் வகையில் 14 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் பள்ளி கல்வி கற்க மாணவ, மாணவிகள் என அனைவரும் ஆர்வமாக பெற்றுக் கொண்டனர். மேலும் கிராமப்புற மாணவ , மாணவியர்கள் உயர்கல்வி கற்க சிரமப்படும் நிலையில் அவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் கிராமங்களில் இருந்து நகரத்திற்கு கல்வி கற்க வரும் மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டையும் வழங்கப்பட்டதால் மாணவ மாணவிகள் எந்தவித சிரமமும் இன்றி உயர் கல்வி கற்று வந்தனர். இந்நிலையில் திமுக அரசு பதவி ஏற்றபின் பல்வேறு கல்வி திட்டங்கள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டது புதுமைப் பெண் கல்வி திட்டம், பள்ளிகளில் நவீன ஆய்வகங்கள் வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கான சிறப்பு கல்வி பயிற்சி என பல வகைகளில் வழங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இலவச சைக்கிள்களை வழங்கும் நிகழ்வு கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது.அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் வழங்கி வருகிறார். இந்நிலையில் இன்று உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பேட்டை மற்றும் இயக்குனாம்பேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அய்யம்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் 67 மாணவர்களுக்கும், ஏகனாம் பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 180 மாணவர்களுக்கும் , ஏகனாம்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 242 சைக்கிள்களும் என மொத்தம் 489 சைக்கிள்களை எம்பி செல்வம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் இன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் , துணைத் தலைவர் சேகர் , ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News