விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம், செம்பாக்கம் அரசினர் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செம்பாக்கம் ஊராட்சி அரசினர் மேல்நிலை பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது..இவ்விழாவில் திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ் ஆர் எல் இதயவர்மன், திருப்போரூர் வேளாண் ஆத்ம குழு தலைவர் பையனூர் சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றினர்.
மேலும் மாணவர்களிடையே பேசிய சேர்மன் இதயவர்மன்,அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவது உங்களின் தேவைக்காக பள்ளி நேரம் முடிந்து ஓய்வு நேரங்களில் அருகில் உள்ள நூலகங்களுக்கு சென்று அறிவு சார்ந்த புத்தகங்களை படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அதனை தொடர்ந்து பேசிய வேளாண் ஆத்ம குழு தலைவர் சேகர் பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றதும் செல் போனை தவிர்த்து புத்தகங்களை எடுத்து படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து விலையில்லா மிதிவண்டியினை வழங்கினர்.