ஆத்தூரில் இலவச வட்ட சட்ட பணிகள் குழுவில் தீர்வு

ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இலவச வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் 611 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு 6 கோடியே64 லட்சத்து 73 ஆயிரத்து 012 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது

Update: 2024-06-08 15:58 GMT

சட்டப்பணிகள் குழு

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாக தேங்குவதை தவிர்க்கவும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் ,காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து, நில ஆர்ஜித வழக்குகள்,குடும்ப நல உள்ளிட்ட வழக்குகளுக்கான சமராச முறையில் இன்றைய தினமே தீர்வு காணும் வகையில் இரண்டு அமர்களாக நடைபெற்றது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீதிமன்றங்களை ஆஜராகி பொதுமக்கள் 612 வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு 6 கோடி 64 லட்சத்து 73 ஆயிரத்து 012 ரூபாய் தீர்வு காணப்பட்டதில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த 18 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. மேலும் இந்த இலவச வட்ட சட்ட பணிகள் (லோக் அதாலத்) ௯டுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி குற்றவியல் நடுவர் ஒன்றாவது,

நீதிமன்ற நீதிபதி முனுசாமி, குற்றவியல் இரண்டாவது நீதிமன்ற நடுவர் நீதிபதி அருண்குமார், விரைவு நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் வழக்காடிகளும் நீதிமன்ற பணியாளர்களும் பொதுமக்களும் இலவச வட்ட சட்ட பணிகள் முகாமில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News