பிப்ரவரி 12ஆம் தேதி முதல் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி
திருவாரூரில் தன்னார்வ பயிலும் பட்டம் மூலமாக அரசுதேர்வுகளுக்கான இலவச பயிற்சி திங்கட்கிழமை முதல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
Update: 2024-02-03 05:06 GMT
மாவட்ட ஆட்சியர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் பட்டம் மூலமாக வரும் பிப்ரவரி 12ஆம் தேதி திங்கட்கிழமை முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்ன மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்