ராசிபுரம் இன்னர் வீல் சங்கமும் ஸ்ரீ லலிதாலயா அகாடமியும் இணைந்து நடத்திய இலவச கம்ப்யூட்டர் பயிற்சி!

Update: 2024-04-22 09:26 GMT

கடந்த 8.4.24 முதல் 20.4.24 வரை இரண்டு வாரங்களுக்கு அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி ராசிபுரம் ஸ்ரீ லலிதாலயா அகாடமியில் (Dr.மாணிக்கம் ஆஸ்பத்திரி அருகில்) அளிக்கப்பட்டது. Dr.ராஜேஷ் Phd மிகவும் சிறப்பாக கம்ப்யூட்டர் பயிற்சி (word,Excel,ppt presentation)முதலியவற்றிலும் மற்றும் மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு விடையளித்து மிகவும் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தார். சுமார் பத்து மாணவ மாணவிகள் பயனடைந்தனர். அவர்களுக்கு ராசிபுரம் இன்னர்வீல் சங்கம் சார்பில் தலைவி சரோஜா அவர்களும் செயலாளர் சுதா அவர்களும் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கியும் மெடல்கள் வழங்கியும் அவர்களை ஊக்குவித்தனர்.பயிற்சி அளித்த Dr. ராஜேஷ் அவர்களுக்கு ஷீல்ட் மற்றும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர்.

Tags:    

Similar News