மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
கிருஷ்ணகிரியில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை MLA மதியழகன் தொடங்கி வைத்தார்.;
Update: 2024-01-29 03:31 GMT
கண் சிகிச்சை முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டை ரோட்டில் SVN கண் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் சத்ய சாய் நகர் குடியிருப்போர் நலசங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் C. S. international பள்ளியில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன், MLA கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தார். குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மருத்துவமனை நிர்வாகிகள் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.