வாசன் கண் மருத்துவமனை சார்பில் ஊடகத்துறை ஊழியர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் !
தர்மபுரி வாசன் கண் மருத்துவமனையின் சார்பில் ஊடகத்துறையில் ஊழியர்களுக்கு கருத்தரங்கு மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.;
இலவச கண் பரிசோதனை
தர்மபுரி வாசன் கண் மருத்துவமனையின் சார்பில் ஊடகத்துறையில் ஊழியர்களுக்கு கருத்தரங்கு மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் கண்ணில் புரை உண்டாகுதல்,கண்ணில் சதை வளர்ச்சி,கிட்டபார்வை,தூரப்பார்வை, கண்ணில் நீர் அழுத்தம்,மாலைக்கண், மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை மருத்துவர் கே.சரண்யா மற்றும் ஜெனரல் மேனேஜர் வெங்கடேஷ் மற்றும் சேலம் ரீஜனல் மேனேஜர்,செல்வம் ஆகியோர்களால் இந்நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட ஊடகத்துறையினர் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் இம்முகாமை தானேஸ்வரன் கிளை மேலாளர் மற்றும் இந்துமதி ஆகியோரின் நன்றி உரையுடன் முடித்து வைக்கப்பட்டது இம் முகாமில் வெங்கடேஷ் பிஆர்ஓ அவர்களால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.