இலவச கண் சிகிச்சை முகாம்
திருவண்ணாமலையில் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;
Update: 2024-06-24 01:58 GMT
இலவச கண் சிகிச்சை முகாம்
திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்லகம் கிராமத்தில் அகரம் புதிய சகாப்தம் லைன்ஸ் கிளப் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இன்று மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாம் சாசனத் தலைவர் ஆர்.ஜே. மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது .முகாமில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் எஸ். சேட்டு, ராமமூர்த்தி, மணிகண்டன், வெங்கடேசன், ரவி, பழனி, சந்திரகுமார், பவுன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.