கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், கோவைசங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் இரண்டு நாட்கள் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கல்வராயன்மலை மாவடிப்பட்டு மலைவாழ் மக்களுக்காக, கரியாலுார் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் பாபு வரவேற்றார்.முகாமிற்கு நிதி வழங்கிய ரோட்டரி நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் 30 பேர் பங்கேற்றனர். இவர்களில் 20 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து இரண்டாம் நாளாக ஏமப்பேர் கரியப்பா நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த முகாமில் 340 பேர் பங்கேற்றனர். இவர்களில் 157 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 177 பேர் பஸ் மூலம் கோவை சங்கரா கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரோட்டரி மாவட்ட ஆளுனர் செந்தில்குமார், துணை ஆளுனர் ராமலிங்கம், முன்னாள் தலைவர்கள் இமானுவேல் சசிக்குமார், மூர்த்தி, சுரேஷ்பாபு, பெருமாள், மருதை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.