ரிஷிவந்தியத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

Update: 2023-11-20 08:02 GMT

கண் சிகிச்சை முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு, ஊராட்சி தலைவர் கோமதிசுரேஷ் தலைமை தாங்கினார். தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜூ முன்னிலை வகித்தார். டாக்டர் அஷ்விதா தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமிற்கு வந்தவர்களை பரிசோதித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர். கண்ணில் குறைபாடுடைய சிலருக்கு கண் கண்ணாடி அணிய அறிவுறுத்தப்பட்டது. முகாமில், 80 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கண்புரை அறுவை சிகிச்சைக்காக 8 பேர் தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Tags:    

Similar News