செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
Update: 2023-11-17 03:41 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்குவட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, வெங் கட சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் மணிமாறன் வரவேற்றார். தொடக்க நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் புதுச்சேரி அகர்வால் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கண் பரிசோதனை செய்து, அதற்கான சிகிச்சைகளை அளித்தனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனி, சுந்தரபாண்டியன், அட்மா குழு தலைவர் வாசு, அய்யாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.