திருப்பூரில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை நடைபெறவுள்ளது.;

Update: 2024-06-29 14:14 GMT

பள்ளி

திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது. திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் விவேகானந்த வித்தியாலயா பள்ளி வளாகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இலவச கண் சிகிச்சை முகாமை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,

விவேகானந்தா சேவா அறக்கட்டளை திருப்பூர் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்துகின்றன. முகாமில் கண் புரை நோய், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், மாறுகண்,சீல் வடிதல், துரப்பார்வை ,கிட்டபார்வை ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் செய்யப்படும்.கண்புரை உள்ள நோயாளிகள் மதியம் 1 மணிக்கே கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவர்.

Advertisement

அவர்களுக்கு ஐ ஓ எல் லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி,உணவு கோவை சென்றுவர போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசம். இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளை தயாராக எடுத்து வரவும். அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகளுக்கு இதய நோய், ரத்தக்கொதிப்பு,

சர்க்கரைநோய், ஆஸ்துமா இருந்தால் மருத்துவர்களிடம் முன்னரே சான்றிதழ் பெற்று வரவேண்டும்,.கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வை கோளாறு இருந்தால் தகுந்த பரிசோதனை செய்யப்படும்.

முகாம் நடக்கும் இடத்திலேயே குறைந்த விலையில் தரமான பொருத்தமான கண்ணாடிகள் வழங்கப்படும். கண்புரை நோய் உள்ள நோயாளிகள் தங்களுடைய ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் அலைபேசி எண்ணை அவசியம் கொண்டு வரவும்.மேலும் தகவல் அறிய 96552-39828 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

Similar News