ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
தர்மபுரி ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி சங்க அரங்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தர்மபுரி ரோட்டரி சங்கம் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் முற்றிலும் இலவச கண் சிகிச்சை முகாம் ரோட்டரி சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கண்ணில் புரை உண்டாகுதல், கண்ணில் சதை வளர்ச்சி,கிட்ட பார்வை,தூரப்பார்வை, கண்ணில் நீர் அழுத்தம், மாலைக்கண், மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் இலவசமாக பரிசோதனைசெய்யப்பட்டது.
ரோட்டரி சங்க இயக்குனர் டி என் சி மணிவண்ணன் ரோட்டரி சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி சக்திவேல்,குணசீலன்,சேகர்,அப்பாவு,விவேகானந்தன் வேடியப்பன்,ரவி, கண்ணன், கருணாகரன்,சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த முகாமில் கண் அறுவை சிகிச்சைக்கு 240 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அழைத்துச் செல்லப்பட்டனர்.