இலவச வீட்டுமனை பட்டா : நிலத்தை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு

இலவச வீட்டுமனைப்பட்டா கொடுத்து பத்தாண்டுகளாகியும் நிலத்தை தராததால், நிலத்தை கண்டுபிடித்து தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.;

Update: 2024-06-25 05:52 GMT
இலவச வீட்டுமனை பட்டா : நிலத்தை  கண்டுபிடித்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு

மனு அளிக்க வந்தவர்கள்

  • whatsapp icon
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலையடிப்புதூரைச் சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட மக்களுக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3 சென்ட் அளவு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி 10 ஆண்டுகளாகியும் இதுவரை சம்பந்தப்பட்டவர்களுக்கு நிலத்தை வழங்கவில்லை.இது குறித்து பலமுறை சத்தியமங்கலம் தாலூக்கா அலுவலகத்தில் மனு அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனையடுத்து பாதிக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று வழங்கிய இலவச வீட்டுமனைப்பட்டாவுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.இலவச வீட்டுமனைப்பட்டா இருந்தும் நிலம் இல்லாத்ததால் நிலத்தை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்தனர்
Tags:    

Similar News