இலவச மருத்துவ முகாம்
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சேலத்தில் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் நல அமைப்பு, இளம் இந்தியர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற கல்வி கண்காட்சியின் ஒரு பகுதியாக இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதற்கு துறை டீன் பேராசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் பொது மக்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இருதயம், கண், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள போதிமரம் முதியோர் இல்லத்திலும் இந்த முகாம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அதிகரிக்கும் நோக்கில் படவிளக்க காட்சி, போட்டி நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியை தமிழ்சுடர் மற்றும் தீபிகா, விக்னேஸ்வரா, ராகுல், தமிழ்அரசி, முனிராஜ், சுரேந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.