இலவச பொது மருத்துவ முகாம்

குமாரபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2024-05-28 08:30 GMT

குமாரபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நேதாஜி நகரில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.

குமாரபாளையம் ஜோ மருத்துவமனை டாக்டர் நடராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில் சர்க்கரை நோயாளிகளுக்கான  பரிசோதனை, சிறுநீரகம்,  இருதயம், கால் நரம்பு சம்பந்தமான அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்றதுடன், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.  நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று  பயன் பெற்றனர்.

Tags:    

Similar News