இலவச மருத்துவ முகாம்!
தெள்ளார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;
Update: 2024-03-24 15:09 GMT
மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் தொண்டு நிறுவனத் தலைவர் விக்ரமன் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சர்வதேச விளையாட்டு வீரர் சௌந்தர்ராஜன் மற்றும் அரசு மருத்துவர்கள், சமூக ஆர்வலர், மனிதம் காப்போம் நிறுவனத்தலைவர் சந்துரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள், மருந்து வகைகள் என அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.