விலைமலையில் இலவச மருத்துவ முகாம்
விலைமலையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-16 09:17 GMT
இலவச மருத்துவ முகாம்
விராலிமலையில் தனியார் தொழிற்சா லையில் அரசின் தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்ட முகாம் நடந்தது. தொழிற்சாலை மேலாளர் விஸ்வநாத், மனிதவள மேலாளர் பத்மநாபன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் ராம்கணேஷ், நமச்சிவயம், தொழிற்சாலை துணை இயக்குநர் ராஜா ஜெயசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சுப்பிரமணியன் காணொலி காட்சி வாயிலாக தொற்று நோய்களுக்கான பணியிடம் சார்ந்த பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.
டாக்டர்கள் பிருந்தாதேவி, சுபா, பிரவீன், பத்மபிரியா ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் தொழிற்சாலையில் பணிபுரியும் 170 தொழிலாளர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டனர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், மக்களை தேடி மருத்துவ சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.