அரசு உதவி பெறும் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
Update: 2023-11-09 02:03 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை, ரத்த வகை கண்டறிதல், ரத்த கொதிப்பு, உள்ளிட்ட சிகிச்சை முகாம் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடந்தது. சேலம் கே.எம்.ஆர்.டி. பொதுநல சேவை மையம், ஈரோடு அகர்வால் கண் மருத்துவம னை ஆகியோர் இணைந்து இந்த முகாமை நடத்தினர். இதில் கலைமகள் வீதி, ராஜா வீதி, புத்தர் வீதி, பாலக்கரை உள்ளிட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் என பலரும் பங்கேற்றனர்.