மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம்

மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்;

Update: 2023-12-07 06:21 GMT
மருத்துவ முகாம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சார்பில் மருதுபாண்டியர் மேல் நிலைப்பள்ளியில் சிவகங்கை ஒன்றியம் உள்ளடக்கிய 18 வயது வரை பயிலும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து தொடங்கி வைத்தார்.

இம்மருத்துவ மதிப்பீட்டு முகாமில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவியர்களுக்கு தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இலவச அறுவை சிகிச்சை, இரயில் பயண அட்டை, பேருந்து பயண அட்டை போன்றவை கிடைக்க வழிவகை செய்து தரப்பட்டது.

இந்த இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் 40 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இம்முகாமில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு உள்ளடக்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், சிவகங்கை வட்டாரக் கல்வி அலுவலர் இந்திராணி, சிவகங்கை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரூபாராணி, சிவகங்கை உள்ளடக்கிய கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் கவிதா, ஆசிரியர் பயிற்றுநர்கள் பஞ்சவர்ணம், மகேந்திரன், பாண்டிச்செல்வி, செந்தில்குமார், சிறப்பாசிரியர்கள் கீதா, மணிகண்டன், ராஜராஜேஸ்வரி மற்றும் இயன்முறை மருத்துவர் ராஜேஸ்வரி இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.

Tags:    

Similar News