திருவாரூர் : 5 கோடி மதிப்புள்ள இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்!
கொரடாச்சேரியில் ரூபாய் ஐந்து கோடியே 22 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் ஆன இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்;
Update: 2023-11-29 01:41 GMT
இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய நிகழ்வு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே தேவகண்டநல்லூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 1212 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 22 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனை பட்டா வினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா ,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.