இலவச பொது மருத்துவ முகாம்

கூடுவாஞ்சேரி நீலன் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் பொதுச் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

Update: 2024-06-03 08:20 GMT

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு 

கூடுவாஞ்சேரி, அருள் நகரில் உள்ள நீலன் பள்ளியில், நேற்று காலை இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் பொதுச் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு, நீலன் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் வசந்தா தலைமை தாங்கினார். இலவச பொது மருத்துவ முகாமை, அரிமா சங்க நிர்வாகி மகேஷ் துவங்கி வைத்தார். இதில், சென்னை சிம்ஸ் மருத்துவமனை மற்றும் சென்னை ஆலந்துார் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவ முகாமை நடத்தினர்.இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வில், 499 மதிப்பெண் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம், பேரையூரை சேர்ந்த காவியஜனனி என்ற மாணவியை பாராட்டி, நீலன் பள்ளி சார்பில், 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து, நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நீலன் பள்ளி மாணவர்களுக்கும், பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News