கிரிக்கெட் சங்கம் நடத்தும் இலவச பயிற்சி!

தூத்துக்குடியில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் இலவச பயிற்சியில் விருப்பம் உள்ளவர்கள் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2024-01-11 05:59 GMT

கிரிக்கெட் சங்கம் நடத்தும் இலவச பயிற்சி!

தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நம் மாவட்டத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு அளிக்க உள்ளது. இதில் 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பங்கு பெறலாம். கல்வி தகுதி தேவை இல்லை. இலவச பயிற்சி மற்றும் தேர்வில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் கிரீஸ்பின் என்பவரை (80156 21154 ) தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் செயலாளர் வி.ஆர். சிவகுமாரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News