டிஆர்பி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

செய்யாறில் டிஆர்பி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது.

Update: 2024-03-30 11:01 GMT

இலவச பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சைவச் செம்மல் சிவத்திரு வ. கண்ணப்பனார் அறக்கட்டளையின் சார்பில் கல்லூரி ஆசிரியர்களுக்கான டிஆர்பி தமிழ்த் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு இன்று (30.03.2024) தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் கு. கண்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பயிற்சி அளித்தார்.
Tags:    

Similar News