நெல்லையில் ஏழு குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிறவி இருதய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-02-28 01:42 GMT
குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை
நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் நேற்று(பிப்.27) அளித்த பேட்டியில் ஆரம்ப கால தலையீட்டு மையத்துடன் இணைந்து பிறவி இருதய குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஆய்வு நடத்தினோம். இதில் ஏழு குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தனியார் மருத்துவமனைகளில் 3 லட்சம் செலவாகும். ஆனால் இங்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.