சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் பிறந்தநாள் : அமைச்சர்கள் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 255 ஆவது பிறந்தநாள் விழாவை ஓட்டி அமைச்சர்கள் முத்துசாமி , கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-28 13:38 GMT
மரியாதை செய்த அமைச்சர்கள்
சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 255 வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அவர் வாழ்ந்த இடமான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஜெயராமபுரத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழக அமைச்சர்கள் முத்துசாமி , கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு.முத்துசாமி , சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் வாழ்ந்த இடமான ஜெயராம்புரத்தில் 91 சென்ட் இடத்தில் 1 கோடியே 82 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அரங்கம் , நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என்றார்.