விக்கிரமங்கலம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை: மக்கள் கடும் அவதி

விக்கிரமங்கலம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை யால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளகினர்.

Update: 2024-06-30 10:49 GMT

மின்வெட்டு 

மதுரை மாவட்டம் விக்ரமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

மின்தடையால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முறையாக கிடைப்பதில்லை எனவும், ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்.., விக்கிரமங்கலம் மின்சார வாரியத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் முதலை குளம் கீழப்பட்டி மேல பெருமாள்பட்டி நரியம்பட்டி கீழப்பெருமாள்பட்டி பகுதியில் ஒரு மாதத்திற்கு மேலாக சரியான முறையில் மின்விநியோகம் வழங்கப்படுவதில்லை. கடந்த சில நாட்களாக மின்விசிறி, மின்மோட்டார் பயன்படுத்த கூட இயலாத அளவுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்க முடியவில்லை. மின் பற்றாக்குறை பற்றி பலமுறை விக்கிரமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளரிடம் முறையிட்டும் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உசிலம்பட்டியில் இருந்து மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

உசிலம்பட்டி மின் நிலையத்தில் இருந்து விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்திற்கு சரியான முறையில் மின் சப்ளை வழங்கப்படுவதில்லை என மின்வாரிய ஊழியர்கள் கூறுகிறார்கள். ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து மின் விநியோகம் சீராக வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

Tags:    

Similar News